உ.பி. முதல்வர் வேட்பாளர் யார்? ஆச்சரியம் அளித்த பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி தேர்தலில் போட்யிடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் முதல்வராவதற்கு தேர்தலில் போட்டியிடுவது அவசியமல்லை.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை காலை தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவரிடம், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "உத்தரப் பிரதேச காங்கிரஸிஸ் நீங்கள் வேறு யாருடைய முகத்தையாவது பார்த்துள்ளீர்களா? பிறகு என்ன?" என சூசகமாக பதில் அளித்துள்ளார். இதன் மூலம், தேர்தல் அரசியலுக்கு அவர் தயாராகி இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மீண்டும் கேட்டதற்கு, "உங்களால் என் முகத்தைப் பார்க்க முடியும் அல்லவா?" என நேரடியாக பதில் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை முன்னின்று நடத்திவரும் பிரியங்கா காந்தியின் புகைப்படம்தான் அக்கட்சியின் அனைத்து விளம்பரங்களிலும் இடம்பெற்றுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜகவும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியும் களம் கண்டுள்ளது.

பிரியங்கா காந்தி தேர்தலில் போட்யிடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் முதல்வராவதற்கு தேர்தலில் போட்டியிடுவது அவசியமல்லை. 

இதற்கு முன்பு வரை, யோகியோ அகிலேஷ் யாதவோ கூட சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. ஆனால், இந்த முறை ஆதித்யநாத்தின் கோட்டையான கோரக்பூரிலிருந்து அவர் போட்டியிடுகிறார். அதேபோல, மத்திய உத்தரப் பிரதேசமான மைன்புரியின் கர்வால் தொகுதியிலிருந்து அகிலேஷ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் முதல்வராக இருந்த போதிலும், சட்ட மேலவை வழியாகவே எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com