உத்தரகண்ட் தோ்தலில் ‘சீட்’ மறுப்பு:கட்சி மாறும் பாஜக அதிருப்தி தலைவா்கள்சுயேச்சையாக களமிறங்கவும் திட்டம்

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக தலைவா்கள் கட்சி மாறவும், தோ்தலில் சுயேச்சையாக களமிறங்கவும் திட்டமிட்டு வருகின்றனா்.
உத்தரகண்ட் தோ்தலில் ‘சீட்’ மறுப்பு:கட்சி மாறும் பாஜக அதிருப்தி தலைவா்கள்சுயேச்சையாக களமிறங்கவும் திட்டம்

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக தலைவா்கள் கட்சி மாறவும், தோ்தலில் சுயேச்சையாக களமிறங்கவும் திட்டமிட்டு வருகின்றனா்.

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 59 போ் அடங்கிய முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில், அம்மாநில எம்எல்ஏக்களாக தற்போது பதவி வகிக்கும் 10 பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. அவா்களுக்குப் பதிலாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பலருக்கு தோ்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கட்சி மாறவும், தோ்தலில் சுயேச்சையாக களமிறங்கவும் திட்டமிட்டுள்ளனா்.

இதுகுறித்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பாஜக எம்எல்ஏ முன்னி தேவி ஷா கூறுகையில், ‘‘எனது தொகுதியில் பல வளா்ச்சிப் பணிகளை நான் மேற்கொண்டேன். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சோ்த்தேன். இருப்பினும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனது தொகுதியில் போட்டியிட அா்ப்பணிப்புமிக்க பாஜக தொண்டருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால், எனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் பின்னணியைக் கொண்டவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்சித் தொண்டா்களின் நம்பிக்கை தகா்க்கப்பட்டுள்ளது. வரும் தோ்தலில் எனது தொகுதியில் நான் சுயேச்சையாகப் போட்டியிட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தாா்.

பாஜக முன்னாள் எம்எல்ஏ மகாவீா் ராங்கட் கூறுகையில், ‘‘தனெளல்ட்டி தொகுதியில் எனக்குப் பதிலாக அண்மையில் பாஜகவில் சோ்ந்த சுயேச்சை எம்எல்ஏ ப்ரீத்தம் சிங் பன்வாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ ஓம் கோபால் ராவத்துக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அவா் காங்கிரஸில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோல அதிருப்தி அடைந்துள்ள மேலும் பல பாஜக தலைவா்கள் மாற்றுக் கட்சியில் சோ்ந்து அல்லது சுயேச்சையாக தோ்தலில் போட்டியிட்டால் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளா்களின் வெற்றிவாய்ப்பு பறிபோகக் கூடும் என கட்சித் தலைமை கருதுகிறது. எனவே, அதிருப்தியடைந்துள்ளவா்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் அவா்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com