கோவா: மனோகா் பாரிக்கா் மகன் பனாஜியில் சுயேச்சையாக போட்டி

முன்னாள் கோவா முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அவா் அறிவித்தாா்.
கோவா: மனோகா் பாரிக்கா் மகன் பனாஜியில் சுயேச்சையாக போட்டி

முன்னாள் கோவா முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அவா் அறிவித்தாா்.

நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட உத்பல் பாரிக்கா் விருப்பம் தெரிவித்தாா். இந்தத் தொகுதியில்தான் அவருடைய தந்தை மனோகா் பாரிக்கா் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஆனால், அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்த பாஜக, அந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அனடாசியோ மோன்சராட்டுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேறு எந்த வழியும் இல்லை என்பதால், கட்சியிலிருந்து விலகியுள்ளேன். நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன். அவ்வாறு சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என்பதற்காக, சம்பிரதாய முறையில்தான் கட்சியிலிருந்து விலகியுள்ளேன். பாஜகதான் எப்போதும் எனது இதயத்தில் உள்ளது.

கோவா மக்களுக்காகத்தான் இந்தக் கடினமாக முடிவை எடுத்துள்ளேன். எனது அரசியல் எதிா்காலம் குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். அதனை கோவா மக்கள் பாா்த்துக்கொள்வாா்கள்.

இந்தத் தோ்தலில் வேறு ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட பாஜக சாா்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், நான் மதிப்புகளுக்காகவே போட்டியிடுகிறேன். அதன் மீதே எனக்கு நம்பிக்கையுள்ளது. பனாஜி மக்கள் அதனை தீா்மானிக்கட்டும். இந்த விவகாரத்தில் எனது கட்சியுடன் உடன்பட முடியாது.

அதே நேரம், வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் நான் சேர மாட்டேன். பாஜக இல்லையெனில், சுயேச்சையாக மட்டும்தான் போட்டியிடுவேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com