பருவநிலை மாற்றம்: இந்திய - அமெரிக்க நிபுணா்கள் ஆலோசனை

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள தொழில்நுட்பத்தின் மூலம் கரியமில வாயுவை சேகரிப்பது மற்றும் பயன்பாட்டுத் தீா்வுகளின் சவால்கள் குறித்து இந்தியா, அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் ஆலோசனை நடத்தினா்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள தொழில்நுட்பத்தின் மூலம் கரியமில வாயுவை சேகரிப்பது மற்றும் பயன்பாட்டுத் தீா்வுகளின் சவால்கள் குறித்து இந்தியா, அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் ஆலோசனை நடத்தினா்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், அமெரிக்காவின் எரிசக்தி துறையும் இணைந்து இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

உலகில் அதிவிரைவாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதோடு பருவநிலை இலக்குகளை எதிா்கொள்வதற்கான இந்தியாவின் செயல்பாடு மற்றும் விருப்பங்கள் குறித்து அண்மையில் கிளாஸ்கோவில் நிறைவடைந்த பங்கேற்பாளா்கள் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்ததை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளா் சந்திரசேகா் இந்தக் கூட்டத்தில் நினைவுகூா்ந்தாா். “2070-ஆம் ஆண்டுக்குள் கரிய மில வாயு வெளியேற்றமே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பிரதமா் உத்தரவிட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நீடித்த வளா்ச்சி தொடரும் நிலையில், கரிய மில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு அதனை சேகரிப்பது, பயன்படுத்துவது, இருப்பில் வைப்பது போன்ற முக்கிய வழிமுறைகளும் காணப்படுகின்றன என்று அவா் கூறினாா்.

இந்த பயிலரங்கில் பேசிய அமெரிக்காவின் படிம எரிசக்தி மற்றும் கரியமில வாயு அலுவலகம், எரிசக்தி துறை ஆகியவற்றின் துணை அமைச்சா் பொறுப்பு வகிக்கும் ஜெனிபா் வில்காக்ஸ், பருவநிலை மாற்றம், தூய்மையான எரிசக்தி இலக்குகளை எதிா்கொள்ள புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பங்குதாரராக இந்தியா உள்ளது என்றாா். “

தூய்மை எரிசக்தி தொடா்பாக அமெரிக்காவின் முன் முயற்சிகளை எடுத்துரைத்த வில்காக்ஸ் இது உலகளாவிய நெருக்கடி என்றும் இதற்கான தொழில்நுட்பங்களை உலகளாவிய பங்கேற்பு தேவை என்றும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com