'காந்தியை நான் ஏன் கொன்றேன்?' படத்தைத் தடை செய்ய பிரதமருக்கு கோரிக்கை

காந்தியை  நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.
'காந்தியை  நான் ஏன் கொன்றேன்?' படத்தைத் தடை செய்ய பிரதமருக்கு கோரிக்கை

காந்தியை  நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.

இதேபோன்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தியை  நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க உத்தரவிடக்கோரியுள்ளது.

காந்தியின் நினைவுநாளையொட்டி ஜனவரி 30-ஆம் தேதி காந்தியை  நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

இதில் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் தனது தரப்பில் உள்ள நியாயத்தை விவரிக்கும் பின்னணியை கொண்ட வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

காந்தியை  நான் ஏன் கொன்றேன்? திரைப்படத்தின் காட்சி
காந்தியை  நான் ஏன் கொன்றேன்? திரைப்படத்தின் காட்சி

காந்தியை கொன்றது குறித்து நாதுராம் கோட்சேவின் விளக்கத்தை சிறப்பு நீதிமன்றம் விவரிப்பது போன்று காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. இந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்த திரைப்படத்தில் நாதுராம் கோட்சேவின் தரப்பு கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. கோட்சே எந்த மரியாதைக்கும் தகுதியற்றவர். இந்த திரைப்படம் வெளியானால் அது நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதுடன், பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். இதனால் இந்த திரைப்படம் வெளியாவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காந்தியை  நான் ஏன் கொன்றேன்? படத்தை தடை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலும் கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com