வேட்பாளர்கள் இறுதி: பாஜக தேர்தல் கமிட்டி நாளை கூடுகிறது

உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய கட்சியின் மத்திய தேர்தல் குழு நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மார்ச் 7-ம் தேதி 7-ம் மற்றும் கடைசி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகண்ட் மற்றும் கோவாவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதியும், பஞ்சாபிலும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில், உத்தரப் பிரதேசத்தில் 194 வேட்பாளர்களையும், பஞ்சாபில் 34 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. மணிப்பூரில் இதுவரை ஒரு வேட்பாளர்கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு நாளை கூடுகிறது. தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் காலை 11.30 மணிக்குக் கூட்டம் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com