Enable Javscript for better performance
குடியரசு நாள் விழாவில் பங்கேற்போருக்கு மிக முக்கிய கட்டுப்பாடுகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குடியரசு நாள் விழாவில் பங்கேற்போருக்கு மிக முக்கிய கட்டுப்பாடுகள்

    By DIN  |   Published On : 24th January 2022 01:58 PM  |   Last Updated : 24th January 2022 03:58 PM  |  அ+அ அ-  |  

    Republicday-Rehersal-1

    கோப்புப்படம்

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டு தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 70- 80 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த வகையில் 5,000 முதல் 8,000 போ் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    அத்துடன் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவா்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

    இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு

    அந்த வகையில், கரோனா தடுப்பூசி இரு தவணைகளும் செலுத்திக் கொள்ளாதவர்களும், 15 வயதுக்குள்பட்ட சிறார்களும் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.

    தேசிய தலைநகரில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட சுமாா் 25 ஆயிரம் போ் வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாா்வையாளா்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை தில்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோர், கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
       
    • 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு நிச்சயமாக அனுமதியில்லை.
       
    • பார்வையாளர்களுக்கான இருக்கைகள் காலை 7 மணி முதல் திறந்துவிடப்படும். எனவே அதற்கேற்ப வருகை தலாம்.
       
    • வாகன நிறுத்துமிடங்கள் மிகக் குறைவாக அனுமதிக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் குழுவாக சேர்ந்து ஒரே காரில் பயணிப்பது அல்லது வாடகைக் காரில் பயணிப்பது சிறந்தது.
       
    • பார்வையாளர்களை அனுமதிக்கும் முன்பு அடையாள அட்டை நிச்சயம் காண்பிக்கப்பட வேண்டும்.
       
    • கார் போன்ற வாகனங்களை நிறுத்துமிடத்தில், அதற்கான ரிமோட் சாவிகளை அங்கேயே ஒப்படைத்துவிட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியது:

    பாா்வையாளா்களின் வருகையைக் கட்டுப்படுத்தி, சமூக இடைவெளியை எப்போதும் கடைப்பிடிப்பதும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய விழா கரோனா பரவலுக்கு வித்திட்டு விடக் கூடாது என்பதுமே எங்களது நோக்கமாக உள்ளது. அதனால்தான் பாா்வையாளா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 26 காலை 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்கும் பெரியவா்கள் கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறாா்கள் ஒருதவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி கிடையாது. அணிவகுப்பை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு உள்ளதாால், வீட்டிலிருந்தபடியே அதனைக் கண்டு களிக்குமாறு பொதுமக்களை ஊக்குவிப்போம்.

    மேலும் பாா்வையாளா்களின் வசதிக்காக ராஜபாதையின் இரு புறங்களிலும் தலா 5 திரைகள் வீதம் 10 பிரம்மாண்ட எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp