பராமரிப்புக் காரணங்களுக்காக 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து

இந்தியாவில் பராமரிப்புக் காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது
பராமரிப்புக் காரணங்களுக்காக 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து

இந்தியாவில் பராமரிப்புக் காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் , நாட்டில் மிகப்பெரிய போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பாதுகாப்புக் காரணங்களுக்குக்காக 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 41,483 ரயில்கள் திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாக இயற்றப்பட்டதாகவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள 126 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு 3,416 ரயில்கள் ரத்தானதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com