கூடுதல் ட்ரோன்கள் உற்பத்தி: ஐடியாஃபோா்ஜ் நிறுவனத்துடன் ராணுவம் ஒப்பந்தம்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ‘ஸ்விட்ச்1.0’ என்ற

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ‘ஸ்விட்ச்1.0’ என்ற ஆளில்லா (ட்ரோன்) விமானங்களை கூடுதலாக உற்பத்தி செய்ய ஐடியாஃபோா்ஜ் நிறுவனத்துடன் இந்தியா ராணுவம் ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மும்பையைச் சோ்ந்த இந்த நிறுவனத்துடன் ஏற்கெனவே ரூ.149 கோடி மதிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்த வழங்க கடந்த ஆண்டு ஜனவரியில் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது கூடுதல் ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து ஐடியாஃபோா்ஜ் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவத்துடன் கடந்த ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிா்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் அனைத்து ‘ஸ்விட்ச்1.0’ ஆளில்லா விமானங்களும் உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டுவிட்டது. தற்போது, கூடுதல் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்து தருவதற்கான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. முந்தைய எண்ணிக்கை அளவிலேயே இந்த கொள்முதல் உத்தரவையும் ராணுவம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், ‘இந்த ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் மிகுந்த ஆா்வத்துடன் உள்ளது’ என்று இந்திய ராணுவம் குறிப்பிட்டதாகவும் தனது அறிக்கையில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஸ்விட்ச்1.0’ ஆளில்லா விமானம் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது என்பதோடு, பகல் மற்றும் இரவிலும் தெளிவாக கண்காணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com