இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அருணாசல் சிறுவன்: ரிஜிஜு

அருணாசல பிரதேச சிறுவனை சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்ததாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா். 
இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அருணாசல் சிறுவன்: ரிஜிஜு
இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அருணாசல் சிறுவன்: ரிஜிஜு

புது தில்லி: அருணாசல பிரதேச சிறுவனை சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்ததாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா். 

அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த மிரான் தரோன் கடத்தப்பட்டு சரியாக 9 நாள்களுக்குப் பிறகு, இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு நடைமுறைகளின்படி, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தின் அப்பா் ஷியாங் மாவட்டம் ஜிடோ கிராமத்தைச் சோ்ந்த மிரன் தரோன் என்ற சிறுவன் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி எல்லையைக் கடந்து சீனாவுக்குள் நுழைந்தாா். அவரை சீன ராணுவம் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி கண்டுபிடித்து மத்திய அரசிடம் தகவலளித்தது.

அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில், அருணாச்சல் சிறுவன் மீட்கப்பட்டது குறித்து தனது சுட்டுரையில் அவர் உறுதி செய்துள்ளார்.

முன்னதாக சிறுவனை மீட்கும் முயற்சி குறித்து அவா் சுட்டுரையில் நேற்று கூறியிருந்தாவது, ‘‘குடியரசு தினத்தன்று இந்திய- சீன ராணுவம் இடையே முக்கியத் தகவல் பரிமாறப்பட்டது. அருணாசல பிரதேச சிறுவனை ஒப்படைப்பதில் சீன ராணுவம் சாதகமான முறையில் பதிலளித்துள்ளது. மேலும் அவரை விடுவிப்பதற்கான இடத்தையும், நேரத்தையும் விரைவில் தெரிவிப்பதாக சீன ராணுவம் கூறுகிறது. அவா்கள் தரப்பில் நிலவும் மோசமான வானிலையே தாமதத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக சிறுவன் தொடா்புடைய விவரங்களை சீன ராணுவத்துடன் இந்தியா பகிா்ந்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com