முந்தைய கரோனா வகைகளிலிருந்து ஒமைக்ரான் எந்தளவுக்கு மாறுபட்டுள்ளது?

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உருமாறியுள்ளன. எனவே இது போன்ற உருமாறிய கரோனா வகைகளுக்கு வெவ்வேறு பண்புகள் உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகையே அச்சுறுத்திவரும் கரோனா, தனது தன்மையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. புதிய மாறுதல்களுடன் உருமாறும் கரோனா விஞ்ஞான உலகுக்கு பெரும் சவால் விடுத்துவருகிறது.

இதற்கு முன்பு வரை  காய்ச்சல், இருமல் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை கரோனாவின் முக்கிய அறிகுறிகளாக இருந்து வந்தது. ஆனால், ஒமைக்ரான் கரோனாவால் பாதிகக்கப்படுவோருக்கு இந்த அறிகுறிகள் பெரும்பாலான நேரங்களில் இருப்பதில்லை.

அதற்குப் பதிலாக, தொண்டைப் புண், தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் ஏற்படும்போது சளி முக்கிய அறிகுறியாக இருந்தது ஜோ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல டெல்டா கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் முக்கிய பிரச்னையாக இருந்தது. 

ஆனால், ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் இருக்கவில்லை. டெல்டா கரோனாவை காட்டிலும் ஒமைக்ரான் வேகமாகப் பரவினாலும் கூட அது லேசான பாதிப்பையே பெரும்பாலும் ஏற்படுத்துகிறது. 

அதேசமயம் டெல்டா, ஒமைக்ரான் அறிகுறிகளில் சில ஒற்றுமைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மூக்கடைப்பு, தலைவலி, சோர்வு, தொண்டைப் புண் ஆகியவை இரண்டு கரோனா வகைகளிலும் பொதுவான அறிகுறிகளாக இருந்துள்ளன.

ஒமைக்ரான் கரோனாவில் மூக்கு ஒழுகுதலே முக்கியமான அறிகுறியாக உள்ளது. இந்த வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73% பேருக்கு மூக்கு ஒழுகுதல் முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து 68 சதவீதம் பேருக்குத் தலைவலி, 64 சதவீதம் பேருக்குச் சோர்வு மற்றும் 60 சதவீதம் பேருக்கு தும்மல் பிரச்னைகள் இருந்திருக்கின்றன.

குறிப்பாக, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொள்ளாதவர்கள்களுக்கிடையே கூட அறிகுறிகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உருமாறியுள்ளன. எனவே இது போன்ற உருமாறிய கரோனா வகைகளுக்கு வெவ்வேறு பண்புகள் உள்ளன. அவை ஏற்படுத்தும் அறிகுறிகளும் வேறு வேறாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com