தென் மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

தென் மாநிலங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)

தென் மாநிலங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை உச்சம் அடைந்துள்ள நிலையில், கேரளத்தில் நாள்தோறும் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, லட்சத் தீவுகள், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த சுகாதாரம் அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிற்பகல் 2 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில், கரோனா நிலவரம், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

முன்னதாக, 9 வட மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com