பூஸ்டர் தடுப்பூசியில் அதிரடி சாதனை படைத்த இந்தியா
பூஸ்டர் தடுப்பூசியில் அதிரடி சாதனை படைத்த இந்தியா

பூஸ்டர் தடுப்பூசியில் அதிரடி சாதனை படைத்த இந்தியா

நாட்டில் முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வெறும் 19 நாள்களில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.


புது தில்லி: நாட்டில் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வெறும் 19 நாள்களில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், பல முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பல சாதனைகளைப் படைத்து, உருமாறிய ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவினாலும் கரோனா மூன்றாம் அலையின் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. 

கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது, வீடுகளுக்குள் ஒளிந்து கொண்ட பொதுமக்களிடையே, தற்போது முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பதும், பல விழிப்புணர்களினால் கிடைத்த பலன் என்றும் கூறலாம்.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10, 2022 அன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு வெறும் 19 நாள்களில், இதுவரை ஒரு கோடிப் பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவின் இணையதளத்தின் புள்ளிவிவரப்படி, வெள்ளிக்கிழமை 3 மணியளவில் 1,02,90,374 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 30.80 லட்சம் பேர் சுகாதாரத் துறையினர், 32.72 லட்சம் பேர் முன்களப் பணியாளர்கள் என்றும், 39.88 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 - 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு இதுவர 4.43 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 164.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com