மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க வேண்டும்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு

மொபைல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்
மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க வேண்டும்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு

 
மொபைல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் வெளியிட்டுள்ள உத்தரவில், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு  ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்கள் செல்லுபடியாகும் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று டிராய் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு ஆண்டில் வாடிக்கையாளர் செய்யும் ரீசார்ஜ்களின் எண்ணிக்கையை 12 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வங்கும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களில் அதிகபட்சமாக 28 நாள்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களையே வழங்கு வருகின்றது, இதனால் வாடிக்கையாளர்கள் மாதாந்திர அடிப்படையில் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. 

"ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் குறைந்தது ஒரு திட்ட வவுச்சர், ஒரு சிறப்பு டாரிஃப் வவுச்சர் மற்றும் முப்பது நாள்கள் செல்லுபடியாகும் ஒரு காம்போ வவுச்சர் திட்டங்களை வழங்க வேண்டும்" என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. டிராய் இந்த அறிவிப்பால் மொபைல் போன் சேவையை கட்டாயமாக்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com