கல்வி, அறிவின் புனித பூமியாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

கல்வி பற்றிய விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மால் காண முடிவதுதான் என்றும், இந்தியா கல்வி மற்றும் அறிவின் புனித பூமி என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கல்வி பற்றிய விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மால் காண முடிவதுதான் என்றும், இந்தியா கல்வி மற்றும் அறிவின் புனித பூமி என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற முதல் மாதம்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை "மனதின் குரல்" (மன் கி பாத்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். இதன் முதல் உரை 2014 ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. 

ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 85 ஆவது "மனதின் குரல்" வானொலி மூலம் உரையாற்றினார்.  

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் திரூப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தொகுதியில் வசிக்கும் தாயம்மாளை மேற்கோள் காட்டி பேசிய மோடி, தாயம்மாளின் செயல்கள் மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் தாயம்மாளுக்கு சொந்தமாக நிலம் இல்லை. பல ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை இளநீர் விற்றுதான் நடத்தி வந்தார. சரியான பொருளாதாரம் இல்லாத நிலையிலும், தாயம்மாள் தனது மகன், மகளின் கல்வி விஷயத்தில் எந்த குறையும் வைக்கவில்லை.  இவருடைய குழந்தைகள் சின்னவீரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். ஒரு நாள் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்கள் கூட்டத்தில், வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட அனைத்தையும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தாயம்மாளும் கேட்டறிந்தார். 

“அதே கூட்டத்தில், இந்தப் பணிகளுக்கு எல்லாம் பணப் பற்றாக்குறை என்ற நிலையில் தடைப்பட்டுப் போனது.  அதன் பிறகு தாயம்மாள் செய்ததை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

இளநீர் விற்று குடும்பத்தை நடத்தி வந்த தாயம்மாள், தனது கஷ்டத்திலும் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். 

மேலும், "உண்மையிலேயே, இதை செய்வதற்கு, ஒரு பெரிய மனம் வேண்டும், சேவை உணர்வு வேண்டும். இதுகுறித்து தாயம்மாள் கூறுகையில், இப்போது பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. ஆனால் பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டால், இங்கே உயர்நிலைக் கல்வி வரை படிக்க முடியும் என்று கூறினார். 

நம் நாட்டின் கல்வி குறித்து நான் பேசிய அதே உணர்வுதான் இது.

இந்தியா கல்வி மற்றும் அறிவின் புனித பூமியாக திகழ்கிறது என்று பிரதமர் கூறினார்.

“எனதருமை நாட்டு மக்களே, கல்வியை புத்தக அறிவிற்குள் அடக்கிவிடமால், அதை ஒரு முழுமையான வாழ்க்கை அனுபவமாகப் பார்க்க வேண்டும். நமது நாட்டின் சிறந்த ஆளுமை கொண்டவர் எல்லாம் கல்வியுடன் ஆழமான உறவைக் கொண்டிருந்தவர்கள்." என்று மோடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com