பேரணிகளுக்கான தடை நீக்கப்படுமா? தேர்தல் ஆணையம் ஆலோசனை

மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பேரணிகள் நடத்துவதற்கான தடை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)

மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பேரணிகள் நடத்துவதற்கான தடை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

உத்தரப் பிரதேசம், உத்தரண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கவுள்ளன.

இதற்கிடையே கரோனா மூன்றாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் ஜனவரி 31 வரை 5 மாநிலங்களிலும் பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்க 10 நாள்களே உள்ள நிலையில் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், மத்திய சுகாதாரத்துறை செயலர், 5 மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பேரணிகளுக்கான தடை குறித்து இன்று மாலைக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com