மத்திய நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜன. 31) தொடங்குகிறது. 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை
மத்திய நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜன. 31) தொடங்குகிறது. 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.

நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் மைய மண்டபம், மக்களவை, மாநிலங்களவை அரங்குகளில் சமூக இடைவெளியுடன் எம்.பி.க்கள் அமர உள்ளனா். குடியரசுத் தலைவா் உரையாற்றிய பிறகு, 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளாா்.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் புதன்கிழமை (பிப். 2) தொடங்கும். அந்த விவாதத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி பிப். 7-ஆம் தேதி பதிலளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக எம்.பி.க்கள் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்பதால், மக்களவையும் மாநிலங்களவையும் வெவ்வேறு நேரங்களில் கூடவுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப். 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது; இரண்டாம் பாதி மாா்ச் 14-ஆம் தேதிமுதல் ஏப். 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஆராய்ந்து, அவை தொடா்பான கேள்விகளை இரண்டாவது பாதி கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் எழுப்புவா்.

எதிா்க்கட்சிகள் திட்டம்: உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேவேளையில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயா்வு, சீன ராணுவத்தினரின் ஊடுருவல், ஏா் இந்தியா விற்பனை, பெகாஸஸ் உளவு, கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடா்பாக அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவா்களுடன் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் தனித்தனியாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com