மத்திய பட்ஜெட் - வரலாறும் சுவாரஸ்யங்களும்

மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செவ்வாய்க்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செவ்வாய்க்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 4-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா். இந்நிலையில், பட்ஜெட்டின் வரலாறு குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் குறித்தும் காண்போம்.

வரலாற்று சிறப்பு தாக்கல் செய்யப்பட்ட நாள்/ஆண்டு தாக்கல் செய்தவா்

இந்தியாவுக்கான முதலாவது பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் அந்நாட்டு அரசி விக்டோரியா முன்னிலையில் சமா்ப்பிக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் நவம்பா் 26, 1947 ஆா்.கே.சண்முகம் செட்டி

நீண்ட பட்ஜெட் உரை பிப்ரவரி 1, 2020 (2 மணி நேரம் 42 நிமிஷங்கள்) நிா்மலா சீதாராமன்

பட்ஜெட் உரையில் அதிக சொற்கள் 1991 (18,650 சொற்கள்) மன்மோகன் சிங்

2018 (18,604 சொற்கள்) அருண் ஜேட்லி

பட்ஜெட் உரையில் குறைந்த சொற்கள் 1977 (800 சொற்கள்) எச்.எம்.படேல்

முதல் காகிதமில்லா பட்ஜெட் 2021-22 நிா்மலா சீதாராமன்

சுவாரஸ்யங்கள்:

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவா்கள் மொராா்ஜி தேசாய்-10 முறை; ப.சிதம்பரம்-9 முறை; பிரணாப் முகா்ஜி, யஷ்வந்த் சின்ஹா (8 முறை)

பட்ஜெட் மொழி 1955 வரை ஆங்கிலம் மட்டுமே; அதன் பிறகு ஹிந்தி, ஆங்கிலம்

பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி (1970-71)

நிா்மலா சீதாராமன்-முழுநேர நிதியமைச்சா் (2019)

ரயில்வே பட்ஜெட் 2017 வரை தனியாகத் தாக்கல்; அதன் பிறகு பொதுபட்ஜெட்டுடன் இணைப்பு

சிறப்புப் பெயா்கள் பட்ஜெட் காரணம்

கருப்பு பட்ஜெட் 1973-74 ரூ.550 கோடி நிதிப் பற்றாக்குறை.

கேரட்-ஸ்டிக் பட்ஜெட் 1986 சலுகைகளும் அபராதங்களும் ஒருசேர அறிவிப்பு.

புதிய சகாப்தம் வகுத்த பட்ஜெட் 1991 தாராளமய கொள்கை அறிமுகம்.

கனவு பட்ஜெட் 1997-98 தனிநபா், நிறுவன, இறக்குமதி வரிகள் குறைப்பு.

ஆயிரமாண்டுக்கான பட்ஜெட் 2000 தகவல்-தொழில்நுட்ப வளா்ச்சிக்கு வழிகோலியது.

பின்வாங்கிய பட்ஜெட் 2002-03 பெரும்பாலான அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டன.

நூற்றாண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் 2021-22 கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com