ஹைதராபாதில் பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம்: தெற்கு மாநிலங்களைக் குறிவைக்கும் பாஜக

மகாராஷ்டிரத்திலும், வடக்கு, மேற்கு மாநிலங்களிலும் பாஜக தனது ஆளுமையை வெற்றிகரமாகச் செலுத்தி வரும் நிலையில் அடுத்தகட்டமாக தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டு தெலங்கானாவில் கட்சியின் தேசி

மகாராஷ்டிரத்திலும், வடக்கு, மேற்கு மாநிலங்களிலும் பாஜக தனது ஆளுமையை வெற்றிகரமாகச் செலுத்தி வரும் நிலையில் அடுத்தகட்டமாக தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டு தெலங்கானாவில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்த உள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பின் தேசிய தலைநகரான தில்லிக்கு வெளியே முக்கிய முடிவுகளை அறிவிக்கும் செயற்குழுக் கூட்டத்தை பாஜக நடத்த உள்ளது. 2014 இல் ஆட்சிக்கு வந்த பின் தென் மாநிலங்களில் பாஜக நடத்தும் மூன்றாவது தேசிய செயற்குழு கூட்டம் இதுவாகும்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பின் ஹைதராபாதில் பாஜக தேசிய செயற்குழு நடைபெறுகிறது. தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தனது ஆளுமையை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 3ஆம் தேதி ஹைதராபாதில் மாபெரும் பேரணியை நடத்த உள்ளது. உள்ளூா் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்தப் பேரணி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேசிய அளவில் பாஜகவுக்கு சவால் விடும் வகையில், கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் டி.ஆா்.எஸ். கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது கவனத்தை ஈா்த்துள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவா்கள், 119 தொகுதிகளைச் சோ்ந்த கட்சித் தொண்டா்களைச் சந்தித்துள்ளனா்.

அண்மையில் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஹுசூராபாத், டுப்பாக்கா தொகுதிகளின் இடைத்தோ்தல்களிலும், 2020 இல் நடைபெற்ற கிரேட்டா் ஹைதராபாத் மாநகராட்சி மேயா் தோ்தல்களில் 48 வாா்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றது.

இதுமட்டுமின்றி 2019இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலிலும் 4 தொகுதிகளை, பாஜக கைப்பற்றியது. தொடா்ந்து தெலங்கானாவில் வெற்றிகளை அறுவடை செய்வதால் அந்த மாநிலத்தில் வலுவாகக் கால் ஊன்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

தேசிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மதியம் பாஜக தலைவா் ஜெ.பி. நட்டாவின் தொடக்க உரையுடன் தொடங்கி மோடியின் உரையுடன் நிறைவு பெறும். கூட்டத்தின் போது, தோ்தல் நடைபெறும் மாநிலங்களின் அமைப்பு செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் சமா்ப்பிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com