கோடை விடுமுறை முடிந்தது: தில்லியில் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தலைநகர் தில்லியில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோடை விடுமுறைக்குப் பிறகு தலைநகர் தில்லியில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தில்லியில் வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 865 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தேசிய தலைநகரில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3,914 ஆக உள்ளது. 

கோடை விடுமுறைக்காக தலைநகரில் உள்ள பள்ளிகள் மே 11, 2022 அன்று மூடப்பட்டன. இருப்பினும், மிஷன் புனியாத்தின் கீழ் வகுப்புகள் ஜூன் 18, 2022 வரை தொடர்ந்தன.

இதற்கிடையில், துணை முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை கல்வி இயக்குநரகம் (DoE) மற்றும் தில்லி மாநகராட்சி (MCD) மிஷன் புனியாத் வகுப்புகளை இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தொடர உத்தரவிட்டார்.

இந்த ஆண்டு மிஷன் புனியாத் வகுப்புகள் போர்க்கால அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவுகள் சிறப்பாக இருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பரவியிருக்கும் கற்றல் இடைவெளியைக் குறைப்பதில் இது முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் துணை முதல்வர் கூறினார்.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஆகஸ்ட் 31 வரை பள்ளிகளில் மிஷன் புனியாத் தொடரும், ஆகஸ்ட் இறுதியில் மறுஆய்வு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com