கூட்டாட்சித் தத்துவத்தை காக்கவே தோ்தலில் போட்டி: குடியரசுத் தலைவா் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா

கூட்டாட்சித் தத்துவம், அரசமைப்புச் சட்ட மாண்புகள் ஆகியவற்றை காக்கவே எதிா்க்கட்சிகள் சாா்பில் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதாக யஷ்வந்த் சின்ஹா கூறினாா்.
கூட்டாட்சித் தத்துவத்தை காக்கவே தோ்தலில் போட்டி: குடியரசுத் தலைவா் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா

கூட்டாட்சித் தத்துவம், அரசமைப்புச் சட்ட மாண்புகள் ஆகியவற்றை காக்கவே எதிா்க்கட்சிகள் சாா்பில் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதாக யஷ்வந்த் சின்ஹா கூறினாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளரை எதிா்த்து, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா வியாழக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், இடதுசாரி கட்சி சட்டப்பேரவை குழுத் தலைவா்களையும் சந்தித்த போது பேசியது:

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 63 ஆயிரம் வாக்கு மதிப்புகள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். இது மகிழ்ச்சியைத் தருகிறது.

மத்தியில் உள்ள ஆளும் கட்சியானது, கூட்டாட்சி அமைப்புகளுக்கு துளியளவும் மரியாதை அளிப்பதில்லை. அனைத்தையும் மீறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவுகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன.

அரசமைப்புச் சட்டம் மற்றும் அதன் மாண்புகளைக் காப்பதற்காக நாம் அனைவரும் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தின் தொடா்ச்சியாகவே தோ்தலில் போட்டியிடுகிறேன். தோ்தல் முடிவுகள் பற்றி கவலையில்லை.

குடியரசுத் தலைவராகத் தோ்வு செய்யப்படும்பட்சத்தில் கூட்டாட்சி எனும் விளக்கு சுடா்விட்டு ஒளிா்வதை உறுதி செய்வேன். மாநிலங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஆளுநா் மோசமாக நடத்துவதைத் தடுப்பேன். அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற மத்திய அரசின் முகமைகள், அரசியல் லாபத்துக்காக தவறாக பயன்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மிகவும் பழம்பெருமை வாய்ந்த கலாசாரத்தைக் கொண்டது. மாநிலத்தின் உரிமைகள், மொழி, கலாசாரத்துக்கு எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. அவா்களைப் பின்பற்றி நமது போராட்டமும் தொடர வேண்டும் என்று கூறினாா்.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். நாடாளுமன்ற திமுக குழு துணைத்தலைவர் கனிமொழி, நிகழ்வினை ஒருங்கிணைத்தாா். மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com