மேற்கு வங்கம்: நூபுர் சர்மா மீது லுக்அவுட் நோட்டீஸ்

நூபுர் சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். 
மேற்கு வங்கம்: நூபுர் சர்மா மீது லுக்அவுட் நோட்டீஸ்

நூபுர் சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். 

கடந்த மே மாத இறுதியில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா கலந்துகொண்டாா். அப்போது அவா் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. 

அவரின் கருத்துகளுக்கு கத்தாா், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை பாஜகவில் இருந்து கட்சி மேலிடம் இடைநீக்கம் செய்தது. அவா் மீது அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரி நூபுா் சா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். 

அவரின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜே.பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் தொடா்பான தனது சா்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் நூபுா் சா்மா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நூபுர் சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்த நூபுர்சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே 2 காவல் நிலையங்களில் இருந்து நூபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஆஜராகவில்லை. நூபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையாக கருத்துகளை கூறியிருந்த நிலையில் தற்போது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com