உதய்பூா் படுகொலை சம்பவம்: 4 பேரை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

உதய்பூரில் தையல்காரா் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி அளித்தது.

உதய்பூரில் தையல்காரா் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கில் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மோசின், ஆசிப் ஆகியோா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். அவா்களை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, நான்கு பேரையும் 12-ஆம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டபோது நான்கு பேரையும் அங்கு கூடியிருந்த வழக்குரைஞா்கள் தாக்க முற்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com