‘அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள்’: சஞ்சய் ரெளத்

சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் எழுந்ததால், முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை அடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ரெளத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“சிவசேனை 100 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று உறுதியாக உள்ளோம். இடைத்தேர்தல் வந்தால் எல்லாம் தெளிவாகும் என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

சிவசேனை பாபா தாக்கரேவுக்கு சொந்தமானது. வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது. பணத்தின் மூலம் வாங்க முடியாது. பணத்தை தாண்டி வேறு ஏதோ கொடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அது வெளிப்படும்போது தெரியும்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வருவார்கள் என இன்னும் நம்பிக்கையுடன் உள்ளோம். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்கள் கட்சியினர், மீண்டும் வருவார்கள்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com