சாக்கடையில் அமர்ந்து போராடிய ஆளுங்கட்சி எம்எல்ஏ: எங்கே? எதற்கு?

சாக்கடையில் அமர்ந்து போராடிய ஆளுங்கட்சி எம்எல்ஏ: எங்கே? எதற்கு?

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து சாக்கடையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து சாக்கடையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த நெல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, கட்சித் தலைவர்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை காலைமுதல் உம்மாரெட்டிகுண்டா பகுதியில் உள்ள 20 இடங்களில் வடிகால் பணிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, உம்மாரெட்டிகுண்டா பகுதியில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகிலுள்ள சாக்கடை நீண்ட நாள்களாக தூர்வாரப்படாததால் துர்நாற்றம் அடிப்பதோடு கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாக தொகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சாக்கடைக்குள் இறங்கிய எம்.எல்.ஏ. மற்றும் கட்சித் தலைவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், 10 நாள்களில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்னை நிலுவையில் இருப்பதாக கூறிய எம்.எல்.ஏ., விரைந்து தூர்வாரப்படவில்லை என்றால் மீண்டும் சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்று எச்சரித்தார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நடத்திய நூதனப் போராட்டம் தொகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com