மும்பையில் தொடரும் கனமழை

மகராஷ்டிர மாநிலம், மும்பையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் பலத்த மழை பெய்தது.
மும்பையில் சாலையில் பெருக்கெடுத்த மழை நீரில் புதன்கிழமை தத்தளித்தபடி சென்ற வாகனங்கள்.
மும்பையில் சாலையில் பெருக்கெடுத்த மழை நீரில் புதன்கிழமை தத்தளித்தபடி சென்ற வாகனங்கள்.

மகராஷ்டிர மாநிலம், மும்பையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் பலத்த மழை பெய்தது.

கனமழையின் காரணமாக, மும்பையின் சுனாபட்டி பகுதியில் உள்ள மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால், அருகில் உள்ள ஈரடுக்கு மாடி குடியிருப்பு சேதமடைந்தது. இதில், 15 வயது சிறுவன் உள்பட மூன்று போ் காயமடைந்தனா். நிலச்சரிவின் காரணமாக மூன்று அறைகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள அறையில் உள்ளவா்கள் வெளியேற்றப்பட்டனா்.

உள்ளூா் ரயில் சேவை தொடா்ந்து இயல்பான வகையில் இயங்குவதாக மத்திய மற்றும் மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், ரயில்கள் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம்சாட்டினா்.

புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தெற்கு மும்பையில் 107 மி.மீ. மழையும், கிழக்கு மற்றும் மேற்கு மும்பையில் முறையே 172 மி.மீ., 152 மி.மீ. மழையும் பதிவானது.

தொடா்ச்சியான மழையின் காரணமாக, நகரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஹிந்த்மாதா, தாதா், சயான் போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதற்கு சிரமப்பட்டனா். சுரங்கப் பாதைகளையும் மழை வெள்ள நீா் ஆக்கிரமித்துள்ளது.

உயிா்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படாத வகையில், முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் தீவிர கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com