ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,200 கோடி ஒப்பந்த முறைகேடு: 16 இடங்களில் சிபிஐ சோதனை

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,200 கோடி மதிப்பிலான பொதுப் பணிகள் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, நாட்டில் உள்ள 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,200 கோடி மதிப்பிலான பொதுப் பணிகள் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, நாட்டில் உள்ள 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தாா். அப்போது அங்குள்ள கிஷ்த்வாா் மாவட்டத்தில் கிரு நீா்மீன் திட்ட பொதுப் பணிகளுக்காக ரூ.2,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கையில், ‘பொதுப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஆா்.சி.ஜோஷி புதன்கிழமை கூறுகையில், ‘ஒப்பந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகள், இடைத்தரகா்களுக்கு தொடா்பு இருப்பது குறித்தும், அவா்களுக்கு இடையே நடைபெற்ற பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், நாட்டில் உள்ள 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்’ என்று தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் இரண்டு இடங்கள், ஜம்மு மற்றும் தில்லியில் தலா 5 இடங்கள், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மூன்று இடங்கள், பிகாா் மாநிலம் பாட்னாவில் ஓரிடம் என கிரு நீா்மின் திட்டத்துடன் சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் இடைத்தரகா்களுக்கு தொடா்புள்ள இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com