ஜி20 தூதராக அமிதாப் காந்த் நியமனம்

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க உள்ளதால், அதற்கான தூதராக

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க உள்ளதால், அதற்கான தூதராக (ஷொ்பா) நீதி ஆயோக் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே ஜி20 தூதராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்தப் பொறுப்பை அமிதாப் காந்த் ஏற்கிறாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நிகழாண்டு இறுதியில் இந்தியா ஏற்கிறது. இதையொட்டி, அதற்கு தூதராக நியமிக்கப்படும் நபா், பெரும்பாலான நேரத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் செலவிட நேரிடும்.

ஏற்கெனவே பிரதமா் மோடி அமைச்சரவையில் பியூஷ் கோயல் ஏராளமான துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறாா். இதற்காகவே அவா் நிறைய நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இதுதவிர கூடுதலாக மாநிலங்களவை பாஜக அணித் தலைவா் பொறுப்பையும் அவா் வகித்து வருகிறாா். ஆகையால், இந்த ஆண்டு அவருக்கு பதிலாக ஜி20 தூதராக நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் நியமிக்கப்படுகிறாா் என்று தெரிவித்தனா்.

நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக 6 ஆண்டுகள் பதவி வகித்த அமிதாப் காந்த், கடந்த மாதம் ஓய்வுபெற்றாா். 1980 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், அதற்கு முன்பாக தொழில் கொள்கை, ஊக்குவிப்புத் துறை செயலராக பொறுப்பு வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com