
நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 18,930 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,815 ஆக சற்று குறைந்துள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 18,815 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,35,72,468-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,22,335 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது. நாள்தோறும் பாதிப்பு விகிதம் 4,96 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | டெங்கு: தமிழகத்தில் 2,822 போ் பாதிப்பு
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 38 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,343 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
கரோனாவில் இருந்து 15,899 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,29,37,876-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.51 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,98,51,77,962 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 17,62,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...