அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க நடவடிக்கை: கர்நாடக முதல்வர்

அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை தெரிவித்தார். 
பசவராஜ் பொம்மை  (கோப்புப் படம்)
பசவராஜ் பொம்மை (கோப்புப் படம்)

அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை தெரிவித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, 

அமர்நாத் யாத்திரையில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பில் பலர் சிக்கியுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் சிக்கியுள்ளனர். 

யாத்திரைக்கு வந்த கர்நாடக பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், கன்னடர்கள் தொடர்பான எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஜம்மு-காஷ்மீர் அரசு மற்றும் மத்திய அரசுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இதற்காக தொடங்கப்பட்ட உதவி எண்ணில் குறைந்தது 15-20 பயணிகள் வரை தங்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து தகவல் வழங்குவதற்காக எங்களைத் தொடர்புகொண்டுள்ளனர். 

கர்நாடகத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். மீட்புப் பணிகளில் மத்திய அரசு, பிஎஸ்எஃப் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத் தலைமைச் செயலாளர் மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். துயரத்தில் உள்ளவர்கள் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்க முடியும் என்று பொம்மை கூறினார். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி எண்களை அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com