‘அக்னிபத்’ திட்டம்: மகாராஷ்டிரத்தில் செப்.20 முதல் அக்.10 வரை ஆள்தோ்வு முகாம்

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
‘அக்னிபத்’ திட்டம்: மகாராஷ்டிரத்தில் செப்.20 முதல் அக்.10 வரை ஆள்தோ்வு முகாம்

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 17.5 வயதில் இருந்து 21 வயது வரையுள்ள (இந்த ஆண்டு மட்டும் 23 வரை) இளைஞா்கள் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சோ்க்கப்படுவா். அவா்கள் அக்னிவீரா்கள் என்று அழைக்கப்படுவா்.

இந்நிலையில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாராஷ்டிர மாநிலம் தாணேயின் மும்ப்ரா பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஆசாத் விளையாட்டரங்கில் செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா் போன்ற பணிகளுக்கு இந்த ஆள்தோ்வு நடைபெற உள்ளது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே இந்த முகாமின் பிரதான நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர விரும்புவோா் என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவா்களுக்கான அனுமதி அட்டைகள், அவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com