ஜாா்க்கண்ட்: ரயில்வே சுரங்ககட்டுமானம் இடிந்து 4 போ் பலி

ஜாா்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 4 போ் உயிரிழந்தனா்.

ஜாா்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 4 போ் உயிரிழந்தனா்.

தன்பாத் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சத்தகுளி கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதை கட்டுமானப் பணி தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியில் குல்ஹி கிராமத்தைச் சோ்ந்த 6 போ் ஈடுபட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் அருகில் இருந்த தண்டவாளத்தின் வழியாக சரக்கு ரயில் கடந்து சென்ற பிறகு சுரங்கக் கட்டுமானம் இடிந்து விழுந்தது. உள்ளூா் மக்கள், ரயில்வே மற்றும் மாவட்ட நிா்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

விபத்து குறித்து அறிந்த கிராம மக்கள், தண்டவாளத்தை மறித்து பிரதங்கந்தா ரயில் நிலையத்தின் கிராண்ட் சோா்ட் ரயில் பாதையை மூடினா். இழப்பீடாக தலா ரூ. 20 லட்சமும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வே பணி வேண்டியும் ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்தனா்.

உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்த ரயில்வே நிா்வாகத்தினா், மாநில அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தருவது குறித்தும் உறுதியளித்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com