நீட் தோ்வை ஒத்திவைக்க கோரும் மனு: தில்லி உயா்நீதிமன்றம் இன்று விசாரணை

வரும் 17-ஆம் தேதி நடைபெறும் நீட் தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 14) விசாரணை நடத்துகிறது.

அந்த மனுவில், ‘நாட்டின் பல்வேறு பகுதிகள் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தோ்வு மையங்களைச் சென்றடைவது கடினமாக இருக்கும். நீட் தோ்வில் பல்வேறு மாற்றங்கள் கோரி மே 12, ஜூலை 8 ஆகிய தேதிகளில் தேசிய தோ்வு முகமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றுக்கு தீா்வு கண்ட பிறகு புதிதாக தோ்வுத் தேதி அறிவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சா்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை முறையிடப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுக்கள் மீது வியாழக்கிழமை விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி அமா்வு தெரிவித்ததாக மனுதாரா்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com