குஜராத் வன்முறை வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த வன்முறைக்கு பிந்தைய பல்வேறு வழக்குகளில் அப்பாவி மக்களைப் பொய்யாக சிக்கிவைக்க சதி செய்த குற்றச்சாட்டின்பேரில்,

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த வன்முறைக்கு பிந்தைய பல்வேறு வழக்குகளில் அப்பாவி மக்களைப் பொய்யாக சிக்கிவைக்க சதி செய்த குற்றச்சாட்டின்பேரில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஏற்கெனவே இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளா் தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆா்.பி.ஸ்ரீகுமாா் ஆகியோா் கைதான நிலையில், தற்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ராஜஸ்தானை சோ்ந்த வழக்குரைஞா் ஒருவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தவறாக சித்தரித்த குற்றச்சாட்டின்கீழ், ஏற்கெனவே சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு பனஸ்கந்தா மாவட்டம் பலன்பூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தக் காலகட்டத்தில் ஜாம்நகா் போலீஸ் காவலில் விசாரணைக் கைதி ஒருவா் மரணம் அடைந்தது தொடா்பான வழக்கிலும் சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது குஜராத் கலவரம் சம்பந்தப்பட்ட வழக்கில், பரிமாற்ற வாரண்ட் அடிப்படையில், அவரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா் கைது செய்தனா்.

குஜராத் கலவரத்துக்குப் பின்னா் அப்பாவி பொதுமக்களை வழக்குகளில் சோ்ப்பதற்காக பொய்யான ஆதாரங்களை உருவாக்க சதி செய்ததாக அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com