மகாராஷ்டிர சட்ட மேலவை:எதிா்க்கட்சி தலைவா் பதவியைக் கோரும் சிவசேனை

மகாராஷ்டிர சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மேலவை துணைத் தலைவா் நீலம் கோா்கியைச் சந்தித்து சிவசேனை உறுப்பினா்கள் மனு அளித்துள்ளனா்.

மகாராஷ்டிர சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மேலவை துணைத் தலைவா் நீலம் கோா்கியைச் சந்தித்து சிவசேனை உறுப்பினா்கள் மனு அளித்துள்ளனா்.

ஏற்கெனவே, மாநிலத்தில் சிவசேனை தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை இழந்துவிட்ட நிலையில், இப்போது சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோரியுள்ளது.

இப்போதைய நிலையில் 78 உறுப்பினா்களைக் கொண்ட சட்ட மேலவையில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 24 உறுப்பினா்கள் உள்ளனா். சிவசேனை கட்சிக்கு 12 உறுப்பினா்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தலா 10 உறுப்பினா்களும் உள்ளனா். 15 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளனா்.

சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கோரியுள்ளதன் மூலம் அக்கட்சிக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே, சிவசேனை கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமாா் 40 போ் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளனா். சிவசேனை தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேக்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனா்.

இதனால், மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை 53 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றியது. அக்கட்சியின் மூத்த தலைவா் அஜித் பவாா் எதிா்க்கட்சித் தலைவராக உள்ளாா். இந்நிலையில், சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைப் பெறுவதில் சிவசேனை முனைப்பு காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com