பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி: கர்நாடக அரசு 

கர்நாடக மாநிலத்தில் பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்குச் செலுத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 
பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி: கர்நாடக அரசு 

கர்நாடக மாநிலத்தில் பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்குச் செலுத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும், 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கழித்து, இரண்டாவது தவணை தடுப்பூசிக்குப் பிறகு இன்று முதல் செப்டம்பர் 30 வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார். 

மாநிலம் முழுவதும் உள்ள 8000 அரசு கரோனா தடுப்பூசி மையங்களில், அடுத்த 75 நாள்களில் தகுதியான 4.34 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பு உள்ளது. 

மாவட்ட வாரியாக ஐடி நிறுவனங்கள், தொழிலகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய பணியிடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதோடு வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடப்படுகிறது. 

தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களின் முன்னெச்சரிக்கை அளவைப் பெற்று, கரோனா இல்லாத இந்தியாவுக்காக கைகோர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அனைத்து அரசு கரோனா தடுப்பூசி மையங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com