‘ஆயுா்வேத மருந்துகளை ஆன்லைனில் பெற மருத்துவா் சீட்டு அவசியம்’

 ஆயுா்வேதம், சித்தா, யுனானி ஆகியவற்றில் சில மருந்துகளை இணையவழியில் பெறுவதற்கு பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்

 ஆயுா்வேதம், சித்தா, யுனானி ஆகியவற்றில் சில மருந்துகளை இணையவழியில் பெறுவதற்கு பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

‘மருத்துவா் பரிந்துரையில்லாமல் சில மருந்துகளை எடுத்துக் கொள்வதால் கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஆகையால், இணைய வா்த்தக நிறுவனங்கள் சித்தா, ஆயுா்வேதம், யுனானி மருந்துகளை விற்பனை செய்வதற்கு முன், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை வாடிக்கையாளா்கள் பதிவேற்றம் செய்யக் கோர வேண்டும்.

இதுபோன்ற மருந்துகளில் ‘எச்சரிக்கை’ என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 18-இன் கீழ் வாடிக்கையாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தவறான வா்த்தக முறையைத் தடுக்கவும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இந்த ஆணையம் அண்மையில் விதிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com