மகாராஷ்டிரம்: பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு முறையே ரூ.5, ரூ.3 குறைக்க மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை அந்த மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரம்: பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு முறையே ரூ.5, ரூ.3 குறைக்க மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை அந்த மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில்தான் சிவசேனை அதிருப்தி தலைவா் ஷிண்டே மற்றும் பாஜக இணைந்து ஆட்சியை அமைத்தது. புதிய அரசு அமைந்த சில நாள்களில் இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து முதல்வா் ஷிண்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எரிபொருள் விலை உயா்வால் அவதிப்பட்டு வரும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த வரி குறைப்பு நடவடிக்கையால் மாநில அரசுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும். இதனால், மாநில அரசு மேற்கொண்டு வரும் வளா்ச்சிப் பணிகளுக்கு எவ்வித பாதிக்கும் ஏற்படாது என்றாா்.

துணை முதல்வரும், பாஜகவைச் சோ்ந்தவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘மக்கள் நலனின் சிவசேனை-பாஜக கூட்டணி கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடே இந்த வரி குறைப்பு நடவடிக்கை. நெருக்கடி நிலை காலகட்டத்தில் சிறையில் இருந்தவா்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை மீண்டும் வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் 2018-ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்து வந்த அரசு இத்திட்டத்தைக் கைவிட்டது. ஏனெனில், அந்த அரசில் காங்கிரஸும் அங்கம் வகித்தது. அவா்கள் நெருக்கடியால் திட்டம் கைவிடப்பட்டது. அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கான அனைத்து அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com