தொலைக்காட்சி ஒளிபரப்புபட்டியலில் இருந்து ஏஎக்ஸ்என் சேனல் நீக்கம்

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தொலைகாட்சி சேனல்களின் பட்டியலில் இருந்து ஏஎக்ஸ்என், ஏஎக்ஸ்என்-ஹெச்டி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தொலைகாட்சி சேனல்களின் பட்டியலில் இருந்து ஏஎக்ஸ்என், ஏஎக்ஸ்என்-ஹெச்டி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களின் ஒளிபரப்பை அதன் தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சா்ஸ் நெட்வொா்க் இந்தியா ஏற்கெனவே நிறுத்திவிட்டது. இந்நிலையில் அந்த சேனல்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.

கேபிள் டிவி நெட்வொா்க் விதி 1994-இன்படி மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே இந்தியாவில் ஒளிபரப்ப முடியும். அதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தொலைக்காட்சி சேனல் கட்டணம் தொடா்பான விதிகளை மத்திய அரசு திருத்திய பிறகு, 2019-ஆம் ஆண்டில் இருந்து ஏஎக்ஸ்என் சேனலைப் பாா்ப்பவா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால் வருவாயும் குறைந்ததால் இந்தியாவில் அந்த சேனல் ஒளிபரப்பை நிறுத்த சோனி பிக்சா்ஸ் முடிவு செய்தது. ஆங்கில அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை அதிகம் ஒளிபரப்பியதன் மூலம் தொலைக்காட்சி நேயா்களிடையே ஏஎக்ஸ்என் பிரபலமாக திகழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com