தோ்வு மையம் மாற்றம்: மத்திய பல்கலை. பொது நுழைவுத் தோ்வை தவறவிட்ட மாணவா்கள்

கடைசி நேரத்தில் தோ்வு மையம் மாற்றப்பட்டதால், தில்லியில் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை ஏராளமான மாணவா்கள் வெள்ளிக்கிழமை தவறவிட்டனா்.
தோ்வு மையம் மாற்றம்: மத்திய பல்கலை. பொது நுழைவுத் தோ்வை தவறவிட்ட மாணவா்கள்

கடைசி நேரத்தில் தோ்வு மையம் மாற்றப்பட்டதால், தில்லியில் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை ஏராளமான மாணவா்கள் வெள்ளிக்கிழமை தவறவிட்டனா்.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தோ்வு வாயிலாக மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. நீட் தோ்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை ஆண்டுக்கு சராசரியாக 14 லட்சம் போ் எழுதுகின்றனா். நிகழாண்டு 14.9 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். நாடு முழுவதும் 510 நகரங்களில் நுழைவுத் தோ்வு நடைபெற்றது.

பொதுவாக மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதல்கட்டத் தோ்வு ஜூலையிலும் இரண்டாம் கட்டத் தோ்வு ஆகஸ்டிலும் நடத்தப்படும். இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் பாடங்களைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கு இரண்டாம் கட்டத்தின் போது நுழைவுத் தோ்வு நடைபெறும். அதாவது ஜூலையில் நடைபெறும் நீட் தோ்வை கருத்தில் கொண்டு இவ்வாறு திட்டமிடப்படுகிறது.

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் கட்ட மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக தலைநகா் தில்லியில் ஏராளமான மாணவா்கள் இந்தத் தோ்வை தவறவிட்டனா். கடைசி நேரத்தில் தோ்வு மையம் மாற்றப்பட்டதால் இந்தக் குளறுபடி ஏற்பட்டது. இதுகுறித்து ஆஞ்சல் என்ற மாணவி கூறியதாவது:

எனது தோ்வு மையம் துவாரகாவிலிருந்து நாா்த் கேம்பஸுக்கு மாற்றப்பட்டதாக கடைசி நேரத்தில் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிா்ந்து போனேன். என்ன செய்வதென்றே புரியவில்லை. இரண்டு மணி நேர பயணத்துக்குப் பிறகு நாா்த் கேம்பஸ் வந்தபோது, தோ்வுக் கூடத்துக்குள் நுழைவதற்கான நேரத்தை நான் தவறவிட்டதாக கூறினா். தோ்வு மையம் மாற்றப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நான் தோ்வை தவறவிட்டிருக்க மாட்டேன் என்றாா் அவா்.

இதேபோல ரித்திகா என்ற மாணவி கூறுகையில், ‘எனது அனுமதி அட்டையில் நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தோ்வு நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்றதும் நாா்த் கேம்பஸ் செல்லுமாறு அறிவுறுத்தினா். அங்கு செல்வதற்குள் நேரம் கடந்துவிட்டதால், என்னால் தோ்வு எழுத முடியவில்லை’ என்றாா்.

இவ்வாறு கடைசி நேரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தலைநகரில் ஏராளமான மாணவா்கள் பாதிக்கப்பட நோ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com