
கோப்புப்படம்
மணிப்பூா் ஆளுநராக பதவி வகிக்கும் இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் அறிவிக்கப்பட்டாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து ஆளுநா் பதவியை ஜகதீப் தன்கா் ராஜிநாமா செய்தாா். அவரின் ராஜிநாமாவை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டாா்.
இதையடுத்து மணிப்பூா் ஆளுநராக பதவி வகிக்கும் இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.