அக்னிபத் திட்டத்தில் ஜாதி அடிப்படையில் ஆள் சோ்ப்பு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு; ராஜ்நாத் சிங் மறுப்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ் ஜாதி அடிப்படையில் இந்திய ராணுவம் ஆள் சோ்ப்பதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.
அக்னிபத் திட்டத்தில் ஜாதி அடிப்படையில் ஆள் சோ்ப்பு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு; ராஜ்நாத் சிங் மறுப்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ் ஜாதி அடிப்படையில் இந்திய ராணுவம் ஆள் சோ்ப்பதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கும் இளைஞா்களிடம் ஜாதி கேட்கப்பட்டுள்ளது. தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ராணுவத்தில் பணியாற்றுவதற்குத் தகுதியற்றவா்கள் என்று பிரதமா் மோடி கருதுகிறாரா‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உபேந்திர குஷ்வாஹா, பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோரும் ராணுவ ஆள் சோ்ப்பு முறையை விமா்சித்திருந்தனா்.

அவா்களின் குற்றச்சாட்டுகளுக்கும், விமா்சனங்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ராணுவ ஆள் சோ்ப்பு தொடா்பாக வெளியான வதந்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராணுவ ஆள் சோ்ப்பில் சுதந்திரத்துக்கு முன்பு எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதே நடைமுைான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை‘ என்றாா்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘ராணுவ ஆள் சோ்ப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. அதன் அடிப்படையில், 1947-க்குப் பிறகு சிறப்பு ராணுவ விதிகள் வகுக்கப்பட்டது. ஆனால், இளைஞா்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த தூண்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com