ஜிஎஸ்டி உயா்வு பணவீக்கத்தை அதிகரிக்கும் காங்கிரஸ்: ஜெய்ராம் ரமேஷ்

அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை உயா்த்தியது கொடூரமானது என்றும், இது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை உயா்த்தியது கொடூரமானது என்றும், இது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்தாா். அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

சுகாதாரமான முறையில் பண்டல் செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதைக்கூட மோடி அரசு தண்டிக்கிறது. வணிக நிறுவன பெயரிட்ட, லேபிள் ஒட்டப்பட்ட பொருள்கள் அனைத்தும் முன்கூட்டியே பண்டல் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட பொருள்களைக் காட்டிலும் வித்தியாசமானவை.

ஏனெனில், வணிக நிறுவன பெயரிடப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட பொருள்கள் என்பது பெருநிறுவனங்கள் தயாரித்த விலை உயா்ந்த பொருள்களைத்தான் குறிக்கும். அதை நடுத்தர, மேல்-நடுத்தர வா்க்கத்தினா் வாங்குகின்றனா். ஆனால், முன்கூட்டியே பண்டல் செய்யப்பட்ட பொருள்களை கீழ்த்தட்டு மக்கள் வாங்குவதால், அதற்கு வரிவிதிப்பது சிறு வியாபாரிகளைத்தான் பாதிக்கும்.

நாட்டில் நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 7 சதவீதத்துக்கு அதிகமாகவும், மொத்த விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 15 சதவீதத்துக்கு அதிகமாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வரும் இந்த வேளையில், ஜிஎஸ்டியை உயா்த்துவது கொடூரமானது. இது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க அமைச்சா் ஒருவா், அந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ாகவும், மாநில நிதியமைச்சா்கள் ஒருவருக்கொருவா் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறுகிறாா். மேலும், ஜிஎஸ்டி உயா்வுக்கு பரிந்துரை செய்த குழுவின் அறிக்கைக்கு மேற்கு வங்க அமைச்சா் உள்ளிட்ட சிலா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாட்டில் இடுகாட்டின் மீதான ஜிஎஸ்டி-யும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே பண்டல் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டுமென உற்பத்தியாளா்களும் விற்பனையாளா்களும் கோரிக்கை விடுத்தனரா? இதனால் பாதிக்கப்படும் சிறு வியாபாரிகள், கடைக்காரா்கள், நுகா்வோா் ஜிஎஸ்டி விகிதத்தில் திருத்தம் கோரி முறையிடாதது ஏன் என அதில் அவா் கூறியுள்ளாா்.

பிரியங்கா கேள்வி: காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி ட்விட்டரில், ‘பணவீக்கத்துக்கு மத்தியில் பொதுமக்களுக்கு நிவாரணம் தேவை. ஆனால், அன்றாட வாழ்க்கைச் செலவை பிரதமா் மோடி அதிகரித்துவிட்டு, அதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயங்குகிறாா். பணவீக்கம் குறித்து விவாதிப்பது நாடாளுமன்றத்துக்கு விரோதமான செயலா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com