ஹைதராபாத்தில் 13 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது

கடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹைதராபாத்:  கடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடப்பா சிவசங்கர் பாபு என்பவர் விவாகரத்து பெற்ற பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்களிடம் பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அடப்பா சிவசங்கர் பாபு (35)  குற்றம் சாட்டப்பட்ட நபர், விவாகரத்து பெற்ற பணக்காரப் பெண்களைக் குறிவைத்து, திருமண சேவை வலைதளங்களில் வரன்தேடி வந்தார். போலியான விவாகரத்து பத்திரங்களை தயாரித்து, அந்த பெண்களுக்கு புது வாழ்வு தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

ஹைதராபாத், ரச்சகொண்டா, சங்கரெட்டி, குண்டூர், விஜயவாடா மற்றும் அனந்தபூர் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு செய்த குற்றவாளியை சைபராபாத் காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள கச்சிபௌலி காவல் துறையினர் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபு  ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ராமச்சந்திரபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் பிறகு கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420 இன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com