ஒடிசாவிற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

 ஒடிசாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவிற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

ஒடிசாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

புவனேஷ்வர் வானிலை ஆராய்ச்சி மையம் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன்படி, பௌத், பொலங்கீர், பார்கார்க், கஜபதி, கஞ்சம், கந்தமால் மற்றும் கலஹந்தி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 21) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நாளை (ஜூலை 22) ஜகத்சிங்பூர், பூரி, குர்தா, அங்குல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை மறுநாளும் (ஜூலை 23) ஒடிசாவின் பல பகுதிகளிலும் கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு தாழ்வானப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கும். சாலைகள் பாதிப்பு, வீடுகள் சேதமடைவது போன்ற அபாயங்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com