பாஜகவின் சிறைகளை உடைத்து மக்களின் அரசை அமைக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியிலிருந்து துடைத்து எறியப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். 
பாஜகவின் சிறைகளை உடைத்து மக்களின் அரசை அமைக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியிலிருந்து துடைத்து எறியப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
 

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

பேரணியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசியதாவது: “ பாஜக நாட்டில் உள்ள நிறுவனங்களை அழித்து வருகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தற்போது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கின்றனர். பாஜக வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் அதிகாரத்திலிருந்து கீழிறக்கப்படுவார்கள். அவர்கள் தோல்வியடைவார்கள்.

பாஜகவினால் தனிப்பெரும் கட்சியாக இருக்க முடியாது என்பது உறுதி. அதன்பின் மற்ற கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைப்பார்கள். பாஜகவின் சிறைகளை உடைத்து மக்களுக்கான அரசை வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கொண்டு வாருங்கள். மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியினை அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு எதிரான செயலாகும். இப்படி உணவுப் பொருள்கள் மீது வரியினை அதிகரித்தால் மக்கள் எதனைச் சாப்பிடுவார்கள். இந்த நாட்டில் ஏழைகள் எப்படி உயிர்வாழ்வார்கள். மகாராஷ்டிரத்தில் அரசினைக் கவிழ்த்தது போன்று மேற்கு வங்கத்தில் செய்ய நினைத்தால் பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com