ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவால் மூச்சுத் திணறல்: விமானம் அவசரமாக தரையிறக்கம்

துபையில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. 
ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவால் மூச்சுத் திணறல்: விமானம் அவசரமாக தரையிறக்கம்


துபையில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

துபையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் ஃப்ளீட் பி787 விமானத்தில் நடுவானில் காற்றின் அழுத்தம் குறைவதாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். இதையடுத்து பயணிகளுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் ஆக்சிஜன் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. 

காற்றின் அழுத்தம் குறைவு காரணமாக விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

விமான ஊழியர்கள் உள்பட 258 பேர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், மும்பையில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 2 மூத்த அதிகாரிகள் குழுவை பொது விமான போக்குவரத்து இயக்குநரகம் நியமித்துள்ளது. 

கடந்த மூன்று நாள்களில், ஒரு சில நிகழ்வுகளால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் விமானத்தை தரையிறக்கியது இது மூன்றாவது சம்பவமாகும். 

கடந்த சில நாள்களாக, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் கோ ஏர் விமானங்கள் பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் ஏர் இந்தியாவுக்கு எதிராக ஏறக்குறைய 1000 பயணிகள் புகார் அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. 

கடந்த ஒரு மாதத்தில் இந்திய விமானங்களில் பல தொழில்நுட்ப கோளாறு சம்பவங்களால் விமானங்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com