திரௌபதி முர்முவுக்கு கோவா சட்டப்பேரவை வாழ்த்து

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை வாழ்த்தி கோவா சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை வாழ்த்தி கோவா சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாஜி கிருஷ்ணா இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டுத் தொடரின் கடைசி நாளான இன்று நிறைவேற்றியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ உட்பட சட்டப்பேரவையின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 


 இந்த தீர்மானம் குறித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது: “ நாட்டின் உயர்ந்த பதவிகளுக்கு சதாரண நபர்கள் வர வாய்ப்புக் கொடுத்து அதற்கான களத்தை உருவாக்கித் தரும் ஒரே கட்சி பாஜக தான். அவர்களது இந்த கொள்கையால் நானே பயனடைந்துள்ளேன். கட்சியில் சதாரண ஒரு உறுப்பினராக இருந்த என்னை மாநில முதல்வராக சேவையாற்ற வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகள். சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் திரௌபதி முர்மு அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது முர்மு அவர்களின் புகழை உணர்த்துவதாக அமைகிறது. அவருக்கு ஆதரவாக வாக்களித்த அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றி.” என்றார்.

இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் தாவத்கர் பேசியதாவது: “ பழங்குடியினப் பெண் ஒருவர் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அனைவரும் சமம் என எண்ணும் தலைமை இருக்கும்போது மட்டுமே இந்த விஷயம் சாத்தியம். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு வரலாறு படைத்துள்ளார். முர்மு அவர்கள் 64 சதவிகித வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com