திரௌபதி முர்முவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து!

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முர்முவை தில்லியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
திரௌபதி முர்முவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து!

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை தில்லியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில், திரெளபதி முா்மு மொத்தம் 6,76,803 (64.03%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 (36%) வாக்குகள் பெற்றார். 

திரெளபதி முா்மு 2,824 எம்எல்ஏ-க்களின் வாக்குளையும், 540 எம்.பி.க்களின் வாக்குகளையும், யஷ்வந்த் சின்ஹா 1,877 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும், 208 எம்.பி.க்களின் வாக்குகளையும் பெற்றாா். 38 எம்எல்ஏ-க்கள், 15 எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 53 பேரின் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக திரெளபதி முர்மு நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராகிறார். அதுபோல, நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையையும் அவர் பெறுகிறார். 

திரௌபதி முர்முவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ள தில்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com