ரஷியாவில் மருத்துவம் பயின்றதாக போலிச் சான்றிதழுடன் போலி மருத்துவர் கைது

ரஷியாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரஷியாவில் மருத்துவம் பயின்றதாக போலிச் சான்றிதழுடன் போலி மருத்துவர் கைது
ரஷியாவில் மருத்துவம் பயின்றதாக போலிச் சான்றிதழுடன் போலி மருத்துவர் கைது

ஹைதராபாத்: ரஷியாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரஷ்யா சென்று வந்தது போன்று தனது கடவுச்சீட்டில் போலி முத்திரை பெற முயற்சித்து வந்த நிலையில் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்மான்கட் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த 36 வயதாகும் விஜயகுமார் என்பவரை மீரட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்து, போலி சான்றிதழ் பெற உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக இவர் இரவு நேரப் பணிக்கு மட்டுமே வருவார் என்பதால், மற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நோயாளிகளுக்கு இரவு நேரத்தில் வெறும் பார்வையாளராக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6.5 லட்சம்  கொடுத்து போலி மருத்துவச் சான்றிதழ் வாங்கியதாகவு, இதற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com